தமிழகம் முழுவதும் 13ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் கொடுங்கோலா்களின் 98 ஆண்டு கால அரக்கர் ஆட்சிக்கு முடிவுரை எழுத புறப்பட்ட “விஜய நகர சாம்ராஜ்ய” வம்சத்தில் வந்தவா் வீரபாண்டியகட்டபொம்முநாயக்கர்.
பொம்மு 16 வயது இளைஞராக இருந்த போது மணியாச்சிக்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில், பெரிய ஏரிக்கரையில் உள்ள சாலிக்குளம் என்ற இடத்தில், இவர் குடும்பம் வாழ்ந்தது.
ஒருநாள் இரவு கள்வர் பலர் கொள்ளையடித்து விட்டு, நள்ளிரவில் இவ்வழியே வந்தனர். அந்த திருடர்களை, பொம்மு ஒருவராகவே எதிர்த்து நின்று தாக்கி வென்று பொருட்களை மீட்டார். அப்போது சாலிக்குளத்தருகே வீரபாண்டியபுரத்தை ஆண்டு வந்த ஜகவீர பாண்டியன் என்ற மன்னன் அச்செய்தியைக் கேள்வியுற்று பொம்முவை தன் அவைக்கு அழைத்து அவர் வீரத்தைப் பாராட்டி பொம்மு கெட்டிக்காரன் என்ற பொருள் பட, “கெட்டி பொம்மு’ என்ற பட்டத்தை வழங்கினார்.
கெட்டி பொம்மு மருவி, “கட்டபொம்மு’ ஆயிற்று.
ஜகவீர பாண்டியன் அக்காலத்தில் தனக்குப் பகைவராயிருந்த விஜயராமன், உக்கிரசிங்கன் ஆகிய இரண்டு அரசர்களை வென்று வருமாறு கட்டபொம்முவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார்.
இந்தக் கன்னிப் போரை வெற்றிகரமாக முடித்து வந்த கட்டபொம்முவுக்கு மன்னன் “வீர பாண்டியன்’ என்ற தன் பெயரின் ஒரு பகுதியைப் பட்டம் போல அளித்து சிறப்பித்ததோடு, அவரைத் தம்முடனேயே இருக்கச் செய்தார். தனக்குப் பின் தன் அரசை ஆள்வதற்கு ஆண் மகவு இன்மையால் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்முவையே அரசுக்கு உரிமையாக்கி விட்டு காலமானார்.
தற்போது ஒட்டப்பிடாரம் என வழங்கும் ஊரின் அருகே தகுதியான இடத்தை தோ்ந்தெடுத்து கோட்டையை அமைத்து, அதைத் தன், தலைநகராக்கிக் கொண்டார்.
இவ்வாறு அமைத்த நகருக்கு, தம் முன்னோர்களில் ஒருவராகிய, “பாஞ்சாலன்’ என்பவரது நினைவாக, “பாஞ்சாலங்குறிச்சி’ (குறிச்சி என்றால் வாழும் இடம் என்று பொருள்.) என்று பெயரிட்டார்.
முஸ்லீம் கொடுங்கோல் ஆட்சியினை துடைதெறிந்த விஜயநகர பேரரசு வழிவந்த கட்டபொம்மு பரங்கிய (பிரிட்டிஷ்) ஆட்சியாளா்களையும் நடு நடுங்க செய்தவா்.
இறுதியில் எட்டப்பன் எனும் வஞ்சகனால் காட்டி கொடுக்கப்பட்டு பரங்கியர்களால் கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை மலா்ந்த முகத்துடனே வீரத்துடன் தூக்கு கயிற்றை முத்தமிட்டாா்.
இன்றும் அவரின் வீர பராக்கிரமத்தை போற்றும் கிராமிய பாடல்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
இன்று மாவீரன் #கட்டபொம்மு அவர்களின் 264 வது பிறந்த தினம்.
ஜெய்ஹிந்த்!
திரு.ரஞ்ஜீத்.vc