என்ன —— இங்க வரீங்க..? தி.மு.க. எம்.எல்.ஏ.வின் திமிர் பேச்சு!

என்ன —— இங்க வரீங்க..? தி.மு.க. எம்.எல்.ஏ.வின் திமிர் பேச்சு!

Share it if you like it

குஜராத்தில் இருந்து வேலை தேடி இங்க ( தமிழகத்திற்கு ) என்ன புடுங்க வரீங்க என தி.மு.க. எம்.எல்.ஏ. ஆபாசமாக பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின்பு, ஏதேனும் ஒரு பிரச்சனை பூதாகரமாக மாறி நாடு முழுவதும் பேசுப்பொருளாகி விடுகிறது. இதனால், தமிழகத்திற்கு தொடர்ந்து அவபெயர் இந்த ஆட்சியால் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யா என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம். இதனை தொடர்ந்து, தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி தனது பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் என பல்வேறு துயர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இச்சம்பவங்களின், சுவடே இன்று வரை மறையால் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், மீண்டும் ஒரு சர்ச்சை தமிழகத்தில் இருந்து ஏற்பட்டுள்ளது. அதாவது, வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பல வடமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, தி.மு.க.வின் கூட்டணியில் இருக்கும் கட்சிதான் தமிழக வாழ்வுரிமை கட்சி. இக்கட்சியின், தலைவராக இருப்பவர் வேல்முருகன். இவர் வடமாநில தொழிலாளர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையிலும் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it