ஆளே இல்லையாம்… ஆனா சாலையாம்… திராவிட மாடல் அரசு!

ஆளே இல்லையாம்… ஆனா சாலையாம்… திராவிட மாடல் அரசு!

Share it if you like it

வேலூர் மாவட்டத்தில் ஆளே இல்லாத ஊருக்கு சாலை அமைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் ஊராட்சி அலுவலகங்கள் தொடங்கி, மாநகராட்சி வரை பல்வேறு ஊழல்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, சாலைகள் அமைப்பதில் நடக்கும் முறைகேடுகள் சொல்லி மாளாது. பல்வேறு இடங்களில் போடப்பட்ட சாலைகள் படுமோசம். காலை வைத்து தேய்த்தாலே செதில் செதிலாக பெயர்ந்து கொண்டு வரும் அளவுக்கு தரமற்றதாக இருந்தன. இன்னும் சில இடங்களில் கையால் பெயர்த்து எடுத்தால் வெங்காயத்தைப் போல உரித்துக் கொண்டு வந்தன.

இப்படிப்பட்ட கூத்துகளுக்கு மத்தியில், ஆளே வசிக்காத பகுதிக்கு ரோடு போட்டு அலப்பறையைக் கொடுத்திருக்கிறது திராவிட மாடல் அரசு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் அமைந்திருக்கிறது தனகொண்டபல்லி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சைனாகுண்டா – மோர்தானா கூட்டுரோடு பகுதியில் 21.45 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஜல்லி செம்மண் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறு. காரணம், இந்த ரோடு போடப்பட்டிருக்கும் பகுதியில் எந்த ஊருமே இல்லையாம். இதனால், ஆளே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துற என்று வடிவேலு கேட்பதுபோல, ஆளே வசிக்காத பகுதிக்கு எதுக்குய்யா ரோடு என்று பொதுமக்கள் அப்பாவியாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, சாலை போடப்பட்டிருக்கும் பகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்குச் சொந்தமான நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய அந்தப் புள்ளி முடிவு செய்திருக்கிறாராம். ஆகவே, பிளாட்களை எளிதில் விற்பனை செய்யும் வகையில், மேற்கண்ட பகுதியில் சாலை அமைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும், ஒன்பது கிரகங்களும் உச்சம்பெற்ற திராவிட மாடல் ஆட்சியில் ஆளே வசிக்காத பகுதியிலும் ரோடு போடலாம், ஊரே இல்லாத பகுதியிலும் ரோடு போடலாம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it