தமிழர்களையும் தமிழ் புத்தாண்டையும் புறக்கணித்த திமுக அரசு – வினோஜ் பி செல்வம் குற்றச்சாட்டு !

தமிழர்களையும் தமிழ் புத்தாண்டையும் புறக்கணித்த திமுக அரசு – வினோஜ் பி செல்வம் குற்றச்சாட்டு !

Share it if you like it

நேற்று வானியல் ரீதியாக சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டு உலக மக்களால் கொண்டாடப்பட்டது. பஞ்சாங்கத்தின்படி இந்த தமிழ் புத்தாண்டு குரோதி ஆண்டாகும். தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

சூரியனை அடிப்படையாக வைத்து, தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக தமிழர்கள் கொண்டுள்ளனர். அதன்படி சுபகிருது நிறைவு பெற்று, இன்று சோபகிருது ஆண்டு பிறக்கிறது.

இந்நிலையில் மத்திய சென்னை பாஜக வேட்பாளரான வினோஜ் பி செல்வம் அவர்கள், முன்னதாக கடந்த வாரம் வியாழ கிழமை அன்று இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட்டது. அந்நாளில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அரசின் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரம்ஜான் வாழ்த்தினை தெரிவித்தனர். முன்னதாக கிறித்துவர்களின் பண்டிகை வந்தது. அதற்கும் ஆவின் பாக்கெட்டுகளில் வாழ்த்தினை தெரிவித்தனர்.

ஆனால் நேற்று தமிழர்களின் விழாவான தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டிற்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் எந்த வித வாழ்த்து படமோ அல்லது வாசகமோ இல்லை. அப்படி என்றால் திமுக அரசு தமிழர்களின் விழாவையும், தமிழர்களையும் புறக்கணிக்கிறதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

https://x.com/polimernews/status/1779418842852151316


Share it if you like it