கட்டாய மதமாற்ற தடை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
மதமாற்ற தடை சட்டத்தை உடனே நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ அலோக் குமார், கூறியதாவது.
கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கட்டாய மதமாற்றம் செய்வது சமீப காலமாக ஆதாரத்துடன் நிறுபிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் சர்வதேச சதிச் செயலில் இருப்பதும் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளளது. பாரத தேசத்தின் பல மாநிலங்களில் கட்டாய மதமாற்றம் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குறிய விஷயமாகும்,. கட்டாய மதமாற்றத்தை தடுக்க 11 மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. இந்த தடை சட்டம் பாரத தேசம் முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதே விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் விருப்பம்.
மேலும் மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வரவும் விசுவ இந்து பரிசத் தொடர்ந்து வலியுறுத்தும். தமிழகத்தில் மதமாற்றம் கட்டாயத்தின் பெயரிலும், பண முதலீடுகள் மூலமாகவும், மிரட்டியும், மற்றும் போலி வாக்குறுதிகள் மூலமாகவும் செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குறியது. மதமாற்றம் சமுதாயத்தில் இருக்கும் நல்லிணக்கத்தை குறைக்கின்றது. மதமாற்றத் தடைச்சட்டம் தமிழ்நாட்டிலுள்ள தேச விரோதிகளை தோலுரித்துக் காட்டும், மற்றும் தேச விரோதமான காரியங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.