விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் ப்ரண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் ஹிந்துக்கள் மீதான ஜிஹாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹிந்து கோவில்கள், வழிபாட்டு பந்தல்கள் அழிக்கப்பட்ட பிறகும் ஹிந்து குடும்பங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன.
ஸ்ரீ துர்கா பூஜையின் போது பங்களாதேஷின் 22 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. பங்களாதேஷில்,
150-க்கும் மேற்பட்ட ஹிந்து துர்கா பூஜை பந்தல்கள் மற்றும் இஸ்கான் கோவில்கள் எரிக்கப்பட்டுள்ளன,
ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள, இந்துக்கள் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகினர்.
ஹிந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மானத்தோடு விளையாடி இருக்கின்றனர்.
இத்தனைக்கும் பிறகும், வங்கதேச அரசு கண்மூடித்தனமாக அமர்ந்திருக்கிறது,
இந்த கொடூரமான சம்பவங்களைப் பார்த்து, இந்துக்களின் கோபம் அதிகரித்து வருகிறது, விஷ்வ ஹிந்து பரிஷத் வங்காளதேச அரசாங்கத்திடம் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொடுமைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோருகிறது மற்றும் இந்தச் சம்பவங்களைத் தடுக்க வங்காளதேசத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசாங்கத்தைக் கோருகிறது.
அக்டோபர் 20, 2021 அன்று, விசுவ ஹிந்து பரிஷத் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் முழு ஹிந்து *சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி பயனுள்ளதாக்க அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஜனாதிபதியின் பெயரில் மனு அனுப்புதல் மற்றும் பயங்கரவாதத்தினை கண்டித்து உருவ பொம்மைகள் எரிக்கப்பட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அறிக்கை வெளியிட்டு உள்ளது.