தி.மு.கவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் தொடர் பிரிவினை பேச்சிற்க்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், இன்று வரை எழுந்து வருகிறது. இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் பிரிவினையை தூண்டும் விதமாக பேசும் நபர்களுக்கு தக்க பதிலடியை இக்காணொளியில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் தான் வட இந்தியாவில் முற்போக்கு சக்திகள் தோற்று போனார்கள்.
நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டு கொடுத்தது கிடையாது.
ஷியாம் கிருஷ்ணசாமி pic.twitter.com/Qz8zjQxqUu
— 𝐏𝐓 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐖𝐢𝐧𝐠 (@PTYouthWing) June 11, 2021
மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம், நிதி தேவைப்படலாம்; அதை முன்னெடுக்க பார்லிமென்ட், நீதிமன்றங்கள் உள்ளன. அதை விட்டு தமிழர்களிடம், இந்தியா மீது வெறுப்பையும், தமிழ் மாநில பிரிவினை எண்ணங்களையும் விதைக்கும் தி.மு.க.,வின் அரசியல், ஆபத்தாக முடியும். ‘அடித்தளத்தை அசைப்பதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றனர். இவர்களுக்கு யார் தான் புரிய வைப்பதோ என்பது தெரியவில்லை என்னும் வகையில் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார் ஷியாம்..