ஈரோடு மேற்கு மாவட்டம் , காளிங்கராயம்பாளையம் ஒன்றியம் எலவம்பாளையம் பஞ்சாயத்து வட்டக்களச்சேரியில் பால்வாடி இயங்கி வந்த அரசு கட்டிடத்தை சர்ச்சாக மாற்றி கிறிஸ்தவ வழிபாடு நடைபெற்று வந்ததாக இந்து முன்னணி குற்றசாட்டை முன் வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சபாஷ்… சட்டவிரோத சர்ச்சை அகற்றிய பொதுமக்கள்…
ஈரோடு மேற்கு மாவட்டம் , காளிங்கராயம்பாளையம் ஒன்றியம் எலவம்பாளையம் பஞ்சாயத்து வட்டக்களச்சேரியில் பால்வாடி இயங்கி வந்த அரசு கட்டிடத்தை சர்ச்சாக மாற்றி கிறிஸ்தவ வழிபாடு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அந்த ஊர் இந்துக்கள், இந்து முன்னணியோடு
இணைந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் இந்துக்கள் மீது வழக்குகளும் போடப்பட்டிருந்தது.
இன்று ஊர் பொது மக்களால் அரசு கட்டிடம் பூட்டப்பட்டு முருகப்பெருமானின் திருவுருவப்படம் வைத்து பூஜைகள் நடைபெற்றது.
இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்களுக்கு
பக்கபலமாக இருந்தனர்.