மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை… 7 பேர் உயிரிழப்பு!

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை… 7 பேர் உயிரிழப்பு!

Share it if you like it

மேற்குவங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெடித்திருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலைியல், பா.ஜ.க.வும் தங்களது கட்சியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் முழுவதும் இன்று (ஜூலை 8) ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போதே வன்முறை, உயிர்ப்பலிகள் இருந்ததால் பாதுகாப்புக்காக கூடுதல் மத்தியப் படைகளை மாநில தேர்தல் ஆணையம் வரவழைத்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஆங்காங்கே கட்டுக்கடங்காமல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கூச்பெஹார் மாவட்டத்தில் ஃபாலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் பா.ஜ.க. தேர்தல் அதிகாரி மாதப் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்டார். வாக்குச்சாவடிக்கு வந்த அவரை உள்ளேயே நுழையவிடாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தடுத்து கொலை செய்ததாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டி இருக்கிறது. ஆனால், இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. இக்கொலை குறித்த தகவல் பரவவே, ஆங்காங்கே பல பகுதிகளிலும் வன்முறைகள் பரவிவருகின்றன.

அதேபோல், நார்த் 24 பர்கானாஸ் பகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரான அப்துல்லா, வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இக்கொலையை கண்டித்து உள்ளூர்வாசிகள் டக்கி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தவிர, முர்ஷிதாபாத்தில் நேற்றிரவு முழுவதும் வன்முறைகள் நடந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபர் அலி என்பவர் உயிரிழந்தார். மேலும், ரெஜிநகர், கார்கிராம் பகுதிகளில் நடந்த வன்முறையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதாகவும், கூச்பெஹார் மாவட்டத்தின் துஃபாகஞ்ச் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.


Share it if you like it