மேற்குவங்க கட்டாய மதமாற்றம்: சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு!

மேற்குவங்க கட்டாய மதமாற்றம்: சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு!

Share it if you like it

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசாக் என்ற இடத்தில் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) இணைந்து விசாரணை நடத்த கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் எப்படி தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் அதிக அளவில் மதமாற்றம் நடக்கிறதோ, அதேபோல, மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பிறகு மதமாற்றம் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கலியாசக் நகரில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர், அப்பகுதியில் வசிக்கும் ஹிந்து குடும்பத்தினரை இஸ்லாத்துக்கு மாறும்படி வற்புறுத்தி வந்திருக்கிறார். மதம் மாற மறுத்த அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி இருக்கிறார். இதையடுத்து, அப்பகுதி பெண்கள் சிலர், தங்களையும் தங்கள் கணவர்களையும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முயற்சிப்பதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தங்களது கணவர்களை பொய் கேஸ் போட்டு சிறையில் அடைப்பதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ.க. தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளருமான அமித் மாள்வியா, மேற்கண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதன் பிறகு, அந்த வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து, மேற்படி வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்ட நீதிபதி ராஜசேகர் மந்தா, மேற்படி மத மாற்ற விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் என்.ஐ.ஏ. ஆகியவை இணைந்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மால்டா மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கு உத்தரவிட்டது. அதோடு, ஜூன் 21-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு நீதிபதி மந்தா உத்தரவிட்டிருக்கிறார். நீதிபதியின் இத்தீர்ப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பாராட்டி இருப்பதுடன், வலுவான மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிழக்கு மண்டலச் செயலாளர் அமியா குமார் சர்க்கார், அப்பாவி ஹிந்துக்களின் சட்டவிரோத மதமாற்றத்தைத் தடுக்கவும், ஜிகாதி காட்டுமிராண்டித்தனத்தைத் தடுக்கவும், வலுவான மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.


Share it if you like it