பஞ்சாமிர்த குடோனில் என்ன நடக்கிறது? என்ற மர்மத்திற்கு மாவட்ட ஆட்சியரும் உணவு பாதுகாப்பு துறையும் உடனடியாக விளக்கம் அளித்து தரமான பஞ்சாமிர்தம் கொடுக்கப்படுகிறது என்பதை நிரூபணம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பழனி தேவஸ்தானம் பஞ்சாமிர்தம் தயாரிப்பு குடோனில் இருந்து மர்மமான முறையில் டன் கணக்கில் பஞ்சாமிர்தம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக விரிவான காரணங்கள் கேட்டால் தேவஸ்தான அதிகாரிகள் வாய் மூடி மௌனம் சாதிக்கிறார்கள். உணவு பாதுகாப்பு துறையும், மாவட்ட ஆட்சியரும் பழனி பஞ்சாமிர்தம் விஷயத்தில் தங்களது கடமையை செய்ய தவறி விட்டனரோ என நினைக்கத் தோன்றுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பஞ்சாமிர்த பிரசாதம் தரமான முறையில் தயாரித்து காலாவதி ஆவதற்கு முன்னால் விற்கப்படுகிறதா? அப்படி இருக்குமெனில் டன் கணக்கில் வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? பஞ்சாமிரத குடோனில் என்ன நடக்கிறது? என்ற மர்மத்திற்கு மாவட்ட ஆட்சியரும் உணவு பாதுகாப்பு துறையும் உடனடியாக விளக்கம் அளித்து தரமான பஞ்சாமிர்தம் கொடுக்கப்படுகிறது என்பதை நிரூபணம் செய்ய இந்து முன்னணி வலியுறுத்துகிறது.