சாத்தான் குளம் வழக்கில் பொங்கிய சின்னவர் எங்கே ? 102 கைதிகள் மரணத்திற்கு பொங்குவாரா ?

சாத்தான் குளம் வழக்கில் பொங்கிய சின்னவர் எங்கே ? 102 கைதிகள் மரணத்திற்கு பொங்குவாரா ?

Share it if you like it

தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளும், மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியும், மூன்று பெண்கள் தனிச்சிறைகளும், மாவட்ட சிறைகள், திறந்த வெளிச் சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் என 138 சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இவைகளில் பல ஆயிரம் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், சென்னை உள்பட முக்கிய 5 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளில், 102 கைதிகள் உயிரிழந்ததும், 214 போ் மனநலப் பாதிப்புக்கு ஆளாகியதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது திமுக அரசு பதவி ஏற்றது முதல், மதுரை, திருச்சி, கோவை, கடலூா், வேலூா் ஆகிய 5 சிறைகளில் மட்டும் இவ்வளவு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. மற்ற சிறைகளில் எத்தனை மரணங்கள் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லாக்கெப் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறை மரணங்களும் அதிகரித்து உள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2021ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர்களான பென்னிக்ஸ் மற்றும் இவரின் தந்தை ஜெயராஜ் ஆகியோரை ஊரடங்கில், குறித்த நேரத்துக்குள் கடையை அடைப்பது தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கினர். இருவர் மீதும் வழக்கை ஜோடித்த போலீஸார், சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு இருவரையும் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவர்களைக் கோவில்பட்டிக் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில், 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலையில் ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த சம்பவம் கொரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது நடந்தது. அப்போது திமுக அமைச்சராக இருந்த உதயநிதி மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சாத்தான் குளம் சென்று லாக்கப் மரணத்தில் பலியான குடும்பத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில் இதே திமுக ஆட்சியில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகள் 102 கைதிகள் உயிரிழந்துள்ளனர், 214 போ் மனநலப் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சாத்தான்குள சம்பவத்திற்கு பொங்கிய திமுகவினர் இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் ? சாத்தான் குளத்தில் பலியான 2 உயிர்கள் தான் உயிரா ? சிறையில் பரிதாபமாக உயிரிழந்த 102 உயிர்கள் உயிர்கள் இல்லையா ?

இந்த சம்பவம் மட்டுமல்ல. 2022ல் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்ய முன்வந்த தலித் இளைஞர் விக்னேஷ் (25) காவலில் வைக்கப்பட்டு ஏப்ரல் 19-ம் தேதி லாக்கப் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்னேஷ் மரணம் குறித்து சட்டமன்றத்தில் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததது. ஏப்ரல் 26-ம் தேதி மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கின் உண்மை தன்மையை கூறாமல் போலீசார் கொடுத்த செய்திகளை மட்டும் சட்டசபையில் கூறினார். மேலும் விக்னேஷ் இறப்பதற்கு முன் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்ட பலத்த காயங்கள் பற்றிக் கூறாமல், சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுக்கு பின் முரணாக கூறினார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “ஏப்ரல் 18ஆம் தேதி இரவு சென்னை கெல்லிஸ் சந்திப்பில் நடந்த வாகன சோதனையில் விக்னேஷ் மற்றும் சுரேஷ் பயணித்த ஆட்டோரிக்ஷாவில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், இருவரும் முரண்பாடான பதில்களை அளித்து வருவதாகவும், வாகன சோதனையில் இருவரும் கஞ்சா மற்றும் மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது என்றும் அவர் கூறினார். “மேலும் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போலீஸார் விரும்பியபோது, ​​​​விக்னேஷ் மறுத்து, காவல்துறையினரை கத்தியால் தாக்க முயன்றார்” என்று முதல்வர் கூறினார்.

ஏப்ரல் 19ஆம் தேதி, ஜி-5 செக்ரடேரியட் காலனி காவல் நிலையத்தில் சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு போலீஸார் காலை உணவை வழங்கினர். அதன்பிறகு, விக்னேஷுக்கு வாந்தி ஏற்பட்டு, வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர், இவ்வாறு முதல்வர் கூறினார்.

விக்னேஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் அவரது உடலில் வலது காலில் எலும்பு முறிவு, முகத்தில் காயங்கள், உடலில் சிராய்ப்புகள், வீக்கம் மற்றும் கைகால்களில் காயங்கள் உள்ளிட்ட பல காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கிறது. “இது ஒரு தெளிவான காவலில் வைக்கப்பட்ட சித்திரவதையாகும், இதன் விளைவாக தான் விக்னேஷின் மரணம் ஏற்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறினர்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் விக்னேஷின் மரணத்தில் வழக்கின் உண்மை நிலையை மறைத்து போலீசாருக்கு கூஜா தூக்கினார்.

குண்டர் சட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில்தான் அதிக குண்டர் சட்டம் பிறப்பிக்கப்படுவதாக தேசிய குற்றபுலனாய்வு பிரிவின் புள்ளிவிபரம் தெரிவித்தது. குண்டர் சட்டம் போதைப் பொருள் கடத்தல், மணல் கடத்தல் உட்பட 9 விதமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பிறப்பிக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற கிளையில் 2022 ஜனவரி முதல் அக்டோபர் 31 வரை குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 961 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 517 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. 445 வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. ஒரு வழக்கில் கூட குண்டர் சட்டம் உறுதி செய்யப்படவில்லை. 86 சதவீத வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.குண்டர் சட்ட உத்தரவுகளில் சட்ட விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று நீதிபதிகள் தமிழக அரசை எச்சரித்து உத்தரவில் கூறினர். மேலும் குண்டர் சட்டம், காவல்துறையினரின் விருப்பமான வேட்டைக் களமாக மாறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.

இவ்வாறு தமிழகத்தில் எந்த எதற்கெடுத்தாலும் குண்டாஸ் சட்டம் போட்டு போலீசாரை திமுக அரசு தனது கைப்பாவையாக பயன்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *