தி.மு.க நிர்வாகியின் தவறை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளரை மாற்றியது ஏன்? மக்கள் கொதிப்பு..! 

தி.மு.க நிர்வாகியின் தவறை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளரை மாற்றியது ஏன்? மக்கள் கொதிப்பு..! 

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.

காவல்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும். எந்த பிரச்னைக்காகவும் யாருக்காகவும் காவல்நிலையத்திற்கு, சென்றோ அல்லது தொலைப்பேசியில் பேசவோ கூடாது. காவல்துறை தன்வசம் இருப்பதால். அவை தொடர்பான புகார்களை அமைச்சர்கள் தன்னிடமே கூற வேண்டும். அமைச்சர்கள் மீது புகார்கள் வந்தால், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற சர்ச்சைகளுக்குள் அமைச்சர்கள் சிக்ககூடாது என்று முதல்வர் சமீபத்தில் கூயி இருந்தார்.

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு, முன்பு. அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. ’மோகன்’ தலைமையிலான போலீசார் ஊரடங்கை. மதிக்காத நபர்களுக்கு கடுமையான, எச்சரிக்கை மற்றும் அபராதம் விதித்து வந்தார்.  அப்போது அங்கு வந்த லோடு, ஆட்டோவுக்கு எஸ்.ஐ. மோகன் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவில் வந்தவர்கள் தி.மு.க. நகர துணை செயலர் நீலகண்டனுக்கு போன் செய்துள்ளனர்.

சில நிமிடங்களில் தனது ஆதரவாளர்களுடன், அங்கு வந்த நீலகண்டன் ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை உடனே ரத்து செய்ய வேண்டும் என  போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘இதற்கு எல்லாம் சிபாரிசுக்கு வரலாமா, என்று தி.மு.க நிர்வாகியிடம். எஸ்.ஐ. மோகன் ‘ கேட்டு உள்ளார். கடந்த  இரண்டு வாரமாக என் தெருவில் தண்ணீர் வரவில்லை. அதை முதலில் தீர்த்து வைங்க’ என்று  எஸ்.ஜ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனை தொடர்ந்து தி.மு.க நிர்வாகியோடு வாக்குவாதம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

  • எஸ்.ஜ மோகனை ஆயுதப்படைக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏன்?
  • தி.மு.க நிர்வாகியை கட்சியை விட்டு நீக்காமல்.
  • எஸ்.ஜ. மோகனை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏன்?
  • எஸ்.ஜ மோகனை மாற்றிய தி.மு.க நிர்வாகி யார்?
  • தி.மு.க நிர்வாகியிடமே பல்பு வாங்கிய முதல்வர் எப்படி?
  • மக்களுக்கு நேர்மையான ஆட்சியை தர முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் | Dinamalar Tamil News


Share it if you like it