ஹிந்துக்களே உஷார்… பொது சிவில் சட்டம் ஏன் தேவை? வீடியோ மூலம் தெளிவான விளக்கம் அளித்த வாலிபர்!

ஹிந்துக்களே உஷார்… பொது சிவில் சட்டம் ஏன் தேவை? வீடியோ மூலம் தெளிவான விளக்கம் அளித்த வாலிபர்!

Share it if you like it

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? இந்தியாவில் இது ஏன் தேவை என்பது குறித்து வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இருக்கிறார்கள். மேலும், தற்போதிருக்கும் சட்டங்களால் ஹிந்துக்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த தெளிவும் இல்லாமல் இருக்கின்றனர். உதாரணமாக, தமிழகத்தில் பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறார். ஆனால், இந்த சட்டம் ஹிந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மேலும், இந்த சட்டத்தில் ஹிந்து பெண் ஒருவர், காதலித்து ஒரு கிறிஸ்தவரையோ அல்லது முஸ்லீமையோ திருமணம் செய்தாலும், பெற்றோர் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். ஆனால், இதே ஒரு கிறிஸ்தவ பெண்ணோ, முஸ்லீம் பெண்ணோ ஒரு ஹிந்து வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டால், அந்த கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் பெற்றோர் அந்த பெண்ணுக்கு சொத்தை பிரித்துத் தர வேண்டிய அவசியமில்லை. இப்படித்தான் நமது நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு சட்டங்களை போட்டு வைத்திருக்கிறார்கள்.

இந்த சட்டங்கள் இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் பொருத்தும் வகையில், கொண்டு வரப்படுவதுதான் பொது சிவில் சட்டம் என்று அந்த வீடியோவில் பல்வேறு உதாரணங்களுடன் மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறார் அந்த வாலிபர். இந்த வீடியோ அனைத்து ஹிந்துக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று. ஆகவே, இந்த வீடியோ முழுமையாகப் பார்த்து பொது சிவில் சட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொள்வோம்…


Share it if you like it