பல கோடி ரூபாய் சொத்து இருந்தால் தான் திமுக அரசு விருது கொடுக்குமா ?

பல கோடி ரூபாய் சொத்து இருந்தால் தான் திமுக அரசு விருது கொடுக்குமா ?

Share it if you like it

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆலகிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளியான ராமு என்கிற முதியவர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார்.
உடனடியாக போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, கடந்த 1957ல் இருந்து, தி.மு.க.வில் உறுப்பினராகவும், கடந்த 1960 முதல் 30 ஆண்டுகள் கிளை செயலாளராகவும் இருந்து கட்சி வளர்ச்சிக்கான பாடுபட்டுளேன். இதற்காக, கடந்த 2022ம் ஆண்டு முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஈ.வே.ரா. விருதுக்கு, அப்போதைய கலெக்டர் மோகன் தனது பெயரை பரிந்துரை செய்தார். அதன் பிறகு, கடந்தாண்டு டிசம்பரில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும், பிறகு அமைச்சர் மஸ்தானிடமும் மனு கொடுத்தேன்.செப்டம்பரில் நடக்கும் முப்பெரும் விழாவில் எனக்கு விருது வழங்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், இதுவரை எந்த விருதும் வழங்கவில்லை. விசாரித்தால், பல கோடி ரூபாய் சொத்துள்ளவர்களுக்கு தான், விருது வழங்குவார்கள் என, கட்சி நிர்வாகிகளே கூறுவதாகவும், அதனால் தான் தீக்குளிக்க முயன்றதாகவும் அம்முதியவர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it