பல்வேறு இடங்களுக்கு சென்று படுக்கை வசதியுடன் கூடிய வார்டுகளை திறந்து வைக்கும் உதயநிதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாரா? 

பல்வேறு இடங்களுக்கு சென்று படுக்கை வசதியுடன் கூடிய வார்டுகளை திறந்து வைக்கும் உதயநிதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாரா? 

Share it if you like it

தன்னுடைய 86 – வது வயது பிறந்த நாளிற்கு. முதல் நாள் உயில் ஒன்றை அப்பொழுதைய தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி வைத்து இருந்தார். அதில் கூறியதாவது., நான் மற்றும் எனது மனைவி தயாளு அம்மாவின் வாழ்நாளுக்குப் பிறகு கோபாலபுர இல்லம் ஏழை, எளியவர்களுக்கு, இலவச மருத்துவ வசதியினை தரும் மருத்துவமனையாக செயல்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழகமே கொரோனா தொற்றில், திக்குமுக்காடி வரும் இச்சூழ்நிலையில். தமிழக முதல்வர் ஸ்டாலின், தயாளு அம்மாவை தனது  இல்லத்திற்கோ, அழகிரி இல்லத்திற்கோ, அல்லது உதயநிதியின் இல்லத்திற்கோ அனுப்பி வைத்து.  கருணாநிதி வாழ்ந்த இல்லத்தை உடனடியாக மருத்துவமனையாக மாற்றி மேலும் பல ஏழை, எளியவர்களுக்கு, உதவலாமே என்று பலர் கருத்து கூறிவருகின்றனர்.  சென்னையில் பல்வேறு இடங்களில் படுக்கை வசதியுடன் கூடிய வார்டுகளை  திறந்து வைக்கும் உதயநிதி கோபாலபுரத்தையும் வெகு விரைவில் திறந்து வைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image

 


Share it if you like it