முதல்வரின் சகோதரருக்கு விஜபி பாதுகாப்பா ? சட்டமன்ற உறுப்பினரா, பாராளுமன்ற உறுப்பினரா ?

முதல்வரின் சகோதரருக்கு விஜபி பாதுகாப்பா ? சட்டமன்ற உறுப்பினரா, பாராளுமன்ற உறுப்பினரா ?

Share it if you like it

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் அனுமுலா கிருஷ்ணா ரெட்டிக்கு விஐபி கான்வாய் பாதுகாப்பு வழங்கியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் 64 இடங்களைப் பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.இதனையடுத்து ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் முதலமைச்சரின் சகோதரர் செல்ல ரெட்டிக்கு விஐபி கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் சகோதரர் அனுமுலா கிருஷ்ணா ரெட்டி சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ இல்லை.

ஆனால் அவருக்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனம் செல்கிறது. இது சட்டவிரோதம். ஆனால் முன்னாள் முதலமைச்சர் கேசிஆரின் பாதுகாப்பு ஒய் ப்ளஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது ஏன் எனவும் பாஜகவை சேர்ந்த ராஜா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.


Share it if you like it