‘பெஸ்ட்’ உலகத் தலைவர்கள்: பாரத பிரதமர் மோடி ‘நம்பர் 1’!

‘பெஸ்ட்’ உலகத் தலைவர்கள்: பாரத பிரதமர் மோடி ‘நம்பர் 1’!

Share it if you like it

உலகின் பிரபலமான தலைவர்களின் தரவரிசை பட்டியலில், 75 சதவிகித ஓட்டுக்களுடன் பாரத பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்திருக்கிறார்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ‘மார்னிங் கன்சல்ட்’ என்கிற பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் பிரபலமான உலகத் தலைவர்களின் தலைமை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. அந்தவகையில், இந்த நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடத்திய சர்வேயில், பாரத பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, நிகழாண்டு கடந்த ஜூன் மாதம் மற்றொரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதிலும், பாரத பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.

இந்த நிலையில்தான், இந்த நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில், உலகத் தலைவர்கள் 22 பேர் தரவரிசைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதிலும், பாரத பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். மோடியின் தலைமையை 75 சதவிகிதம் பேர் அங்கீகரித்திருக்கிறார்கள். 2-வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்டரஸ் மனுவேல் லோபஸ் இருக்கிறார். இவருக்கு, 63 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதேபோல, 54 சதவிதம் பேர் ஆதரவுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 3-வது இடத்திலும், பிரேசில் அதிபர் போல்சனரோ 42 சதவிகித ஆதரவுடன் 4-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவிகித ஆதரவுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவிகிதம் பேர் ஆதரவுடன் 6-வது இடத்திலும், ஜப்பான் பிரதமர் கிஷிடோ 38 சதவிகித ஆதரவுடன் 7-வது இடத்திலும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 34 சதவித ஆதரவுடன் 8-வது இடத்திலும், ஜெர்மனி சான்சிலர் ஸ்கால்ஜ் 30 சதவிகித ஆதரவுடன் 9-வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25 சதவிகித ஆதரவுடன் 10-வது இடத்திலும் இருக்கிறார்கள். இந்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தேர்தல்கள், தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், ஓட்டுப்பதிவு விஷயங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களை அளிக்கிறது. இத்தளம் நாள்தோறும் 20,000-க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it