யோகா – ஹிந்து தர்மமே இதன் பிறப்பிடம் – ( பகுதி -02 )

யோகா – ஹிந்து தர்மமே இதன் பிறப்பிடம் – ( பகுதி -02 )

Share it if you like it

இந்துமதம் உலகத்திலேய மிக சிறப்பான பண்பாடு, கலாச்சாரம் கொண்ட நாடு நமது பாரத திருநாடு. இந்த உயர்ந்த பண்பாடு, கலாச்சாரத்தைத் தான் நாம் ஹிந்து மதம் என்று கூறுகிறோம். ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், தர்ம நெறிக்கு உட்பட்டு வாழ வேண்டும் என்பதை பூவுலகில் கடவுளே மனிதனாக அவதரித்து சனாதன தர்மத்தின் (ஹிந்து மதம்) வழியாக வாழ்ந்து பல அறிய பொக்கஷிங்களை நமக்காக கொடுத்துள்ளார்கள். இந்த ஹிந்து மதம் தான் உலகத்திலுள்ள அனைத்து மதங்களுக்கும் முதன்மையானதாகவும், முன்னோடியாகவும் உள்ளது.

யோகாசனம் ஒரு மனிதனின் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி ஐம்புலனை அடக்கி அவன் ஆழ்மனதில் உள்ள வெற்றிடத்தில் தெய்வத்தின் சிந்தனையை தூண்ட செய்வது இந்த யோகாசனத்தின் மூலம்தான்.

இந்த யோகாசனம் என்ற சொல் இந்து மதத்தில் மனதை நோக்கிய அகப்பயணம் அல்லது தியானம் செய்தல் என்னும் பயிற்சி முறைகளோடு தொடர்புடையது.
யோகாவின் முக்கிய கிளைகளாக இந்து மதக் கோட்பாட்டில் அடங்குவது கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், ராஜயோகம், ஹதயோகம் ஆகிய யோக நெறிகளாகும்.

பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் தொகுக்கப்பட்டிருப்பதுதான் ராஜயோகா மற்றும் இந்து மதக்கோட்பாட்டின் படி எளிமையான யோகாவாக அறியப்பட்டுள்ளது. இது ‘சாங்கிய’ வரலாற்று நெறிவழியின் ஒரு பகுதியாகும்.

யோக சாஸ்த்திரத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிற ஹிந்து நூல்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை, ஹதயோக ப்ரதிபிகா, சிவ சமிதா மற்றும் பலவாறான தந்திரங்கள் போன்ற இந்து சமய நூல்களில் யோகாசனத்தைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

சிந்து – சரஸ்வதி நாகரீகத்தில் பல முத்திரைகள் மற்றும் புதைப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிகாலத்தில்கூட யோகா அறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

உபநிஷதங்களில் அதாவது வேதங்களின் மறைந்திருக்கும் பொருளை விளக்குகின்றன. தனிப்பட்ட போதனைகள் மூலம் மனம் மற்றும் ஆன்மாவின் செயல்பாடுகளை விவரிக்கின்றன. அவர்கள் ஞானத்தை அடைவதற்கான இலக்கை நோக்கி தியானம் மற்றும் மந்திர பாராயணத்தை செய்வதன் மூலம் உயர்நிலை என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

108 உபநிஷதங்கள், 20 யோக உபநிஷதங்கள் உள்ளன. ப்ராணாயாமா (சுவாசப் பயிற்சி) மற்றும் ப்ரத்யாஹாரா (புலன்களைத் திரும்பப் பெறுதல்) சுவாசப் பயிற்சிகள், ஒலி மற்றும் தியானம் போன்ற பல்வேறு யோக நுட்பங்களைப் பற்றி பேசுகின்றன.

பகவத் கீதையில் கிருஷ்ணன் “சமத்வம் யோக உச்யாதே” மனதில் சமத்துவமும், அமைதியான சூழலும், உண்மையான மகிழ்ச்சியும் யோகாவின் மூலம் கிடைக்கிறது.
கிருஷ்ண பகவான் அர்ஜூனனுக்கு கர்மயோகத்தைப் பற்றியும், தர்மம், பக்தியோகத்தையும், ஞான யோகத்தையும் விளக்குகிறார்.

மகாபாரதத்தின் சில வசனங்களில் விச்சாரா (முழுமையாக, நுட்பமான பிரதிபலிப்பு) மற்றும் விவேக (புத்தி கூர்மையுடைய) என்று குறிப்பிட்டுள்ளார் வியாச முனிவர். இதனை பதஞ்சலி முனிவர் எல்லா இடங்களிலும் பிரம்மத்தை பரிந்து கொள்வது மற்றும் ஆத்மாவை உலகளாவிய பிரம்மத்துடன் ஒன்றிணைதல் என கூறியுள்ளார்.
ஆதிசங்கராச்சாரியா போன்ற பல முனிவர்களும் தத்துவ ஞானிகளும் ராஜ யோகா மற்றும் ஞான யோகாவின் வளர்ச்சி மற்றும் தொடர்ச்சிக்கு பங்களித்தனர்.
பல மகான்களும், முனிவர்களும் யோகாவின் மூலம் இறைநிலை அடைந்து போரானந்தத்தை பெற்று அவர்கள் மனதில் தோன்றிய இறைவனின் வடிவத்தை கற்களில் செதுக்கி சிலைகளாகவும், கோயில் சிற்பங்களாகவும் வடிவமைத்து அந்த சிலைகளின் மூலம் மக்களுக்கு பல நல்ல செய்திகளை புகட்டினார்கள்.
உதாரணம்: ஆதியோகி சிவன், நடராஜ பெருமான், யோக நரசிம்மர், தட்சிணாமூர்த்தி இது போன்று கோயில் கோபுரங்களில் பல எண்ணற்ற யோக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நம் பாரத நாட்டில் உடல் நலனில் அதிக கவனம் இருந்தது. ராஜ யோகாவை ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பி.கே.எஸ். ஐயங்கார், கே. பட்டாபி, பரமஹம்ச யோகானந்தா, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் யோகாவை அனைவருக்கும் கொண்டு சென்றனர்.

நமது பாரத நாட்டின் பெருமையும், நமது பண்பாடு, கலாச்சாரம், ஆன்மிகம், சனாதனதர்மம், யோக கலைகள் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று அதன் சிறப்புகளை மிகச் சிறப்பாக எடுத்து சொன்ன பெருமைக்குரியவர் நமது சுவாமி விவேகானந்தர்.

நமது பாரத நாட்டில் மகான்களும், முனிவர்களும், அறிஞர்களும் தோன்றி நமது இந்து தர்மத்தையும், யோகாசனம் போன்ற பல கலைகளை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டி ஒவ்வொரு கலையிலும், தத்துவம், அறிவியல் போன்ற அனைத்திலும் இந்த தர்மத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகவும், அழகாகவும் எடுத்துக்கூறி நமது பாரத நாட்டை பெருமை அடைய செய்துள்ளார்கள். இன்று அனைத்து உலக நாடுகளும் நம்மை வியந்து பார்க்கும் அளவிற்கும் நம் வழியை பின்பற்றிக்கொண்டும் உள்ளனர். இது நமது பாரதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் பெருமை வாய்ந்தது.


Share it if you like it