உத்திர பிரதேசம் கங்கை கரையில் செழுமைக்கும் அந்த செழுமையின் காரணமாக பல்வேறு அந்நியர்களின் படையெடுப்புக்கும் ஆளான சத்ரிய பூமி. பல்வேறு சாதி – இன- மொழி – மதம் என்ற கதம்ப குவியலான மக்கள் சமூகத்தால் சிறு பொறிப் பறந்தாலும் அனல் தகிக்கும் பிண்ணணி கொண்ட கலவர பூமி. அம்மண்ணை ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வருவதும் ஸ்திரமான ஒரு நல்லாட்சியை வழங்குவதும் சாதாரண விஷயம் அல்ல. கடந்த கால இந்து மன்னர்கள் சாதித்த அந்த சாதனையை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அதே மண்ணில் யோகி என்னும் ஒரு சன்யாசி மீண்டும் சாதித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் ஒரு ஆட்சியாளர் தன்னலமற்ற மக்கள் சேவையை இலக்காகக் கொண்டு அதிகாரத்தில் அமருவானேயானால் – தன் குடும்பம் – தன் பரிவாரம் என்ற சுயநலம் விடுத்து மக்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் எது தேவையோ? அதை மட்டும் எந்த சமரசமும் இல்லாமல் செய்ய தயாராக இருப்பானேயானால் – அவனுக்கு ஜாதி – மத – மொழி- இனம் கடந்து அனைத்து மக்களின் ஆதரவு அவன் கேட்காமலேயே வந்து சேரும் என்பதை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் எந்த உத்திரபிரதேசத்தை கலவர பூமி – சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கூட தெரியாத நிர்வாகம் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற ரீதியிலான கட்டப்பஞ்சாயத்து அரசியல் என்ற அடையாளத்தை சம்பாதித்து வைத்திருந்த ஒரு மாநிலத்தை இன்று முழுமையாக சட்டம் ஒழுங்கும் அமைதி சமூக அமைதியும் இருந்தால் மட்டுமே இங்கு வளர்ச்சியும் நலனும் பாதுகாக்கப்படும் வளர்ச்சியும் நலனும் மட்டுமே நம்மையும் நம் சந்ததிகளையும் இங்கு பாதுகாப்பாக வாழ வைக்க முடியும் என்பதை அங்குள்ள அனைத்து தரப்பு மக்களையும் உணரச் செய்ததன் மூலம் இன்று வளர்ச்சியில் பின்தங்கி இருந்த உத்தர பிரதேசம் மாநிலத்தை கொரோனா கால நெருக்கடிகளையும் கடந்து ஒரு பலமான வளர்ச்சி பாதையில் வேகமாக கொண்டு போகிறார்.
அந்த சன்னியாசி ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலாய் நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ டூல்கிட் கள் அரங்கேற்றப்பட்டது. ஒன்று நாங்கள் ஆள வேண்டும். இல்லையேல் எங்களின் அடிமைகள் ஆள வேண்டும். இரண்டும் அல்லாத ஒரு எதிர்க்கட்சி ஆள்வதையே நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனும்போது எங்களின் எதிரியான ஒரு இந்து ஆன்மீகவாதி ஒரு தேசியவாதி ஆள்வதை எப்படி அனுமதிப்போம்? என்று எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் இந்து – இந்திய விரோதிகள் ஒன்றிணைந்து ஹத்ராஸ் சம்பவம் – ஆக்சிஜன் சிலிண்டர் விஷயத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு – வெள்ளிக்கிழமை தோறும் திட்டமிட்ட கலவரங்கள் என்று எதிர் கட்சிகள் திட்டமிட்ட அத்தனையும் தனது சமரசம் இல்லாத சட்டம் ஒழுங்கு மூலமாகவும் இரும்பு கரம் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் கலவரக்காரர்களை ஒன்று திருந்திக் கொள்ளுங்கள். இல்லையேல் மரணித்து விடுங்கள் . இரண்டைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. என் மாநில மக்களின் அமைதி பாதுகாப்பு தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. அதற்காக நான் இந்த எல்லைக்கும் போவேன் . எந்த விலையையும் தரத் தயாராக இருக்கிறேன் என்று அனுதினமும் ஒரு அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார்.
லஞ்சம் – ஊழலில் திளைத்துக் கொண்டிருந்த மாநில அரசு நிர்வாகம் – காவல் நிலையத்தில் கூட பாதுகாப்பு இல்லை என்ற ரீதியில் இருந்த மாநிலக் காவல்துறை இரண்டையும் தனது அதிரடியால் சரி செய்து நேர்மை துணிச்சல் தீரமிக்க அதிகாரிகளை பணியமர்த்தி அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் நல்ல இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை வழிகாட்ட பணி அமர்த்தி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரமும் பாதுகாப்பையும் உறுதி செய்ததன் மூலம் இன்று மாநிலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சமூக அமைதி நீடித்த வளர்ச்சி நிலையான சட்டம் ஒழுங்கு என்ற காரணத்தால் இந்தியாவில் தொழில் தொடங்க பாதுகாப்பான உகந்த மாநிலம் என்ற அந்தஸ்தை தன் மாநிலத்திற்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
தனது அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைகளால் அரசு அதிகாரிகள் தரப்பையே எதிர்ப்பாக சம்பாதித்து வைத்துக் கொண்ட போதிலும் மக்களின் நம்பிக்கையும் செல்வாக்கும் கட்டிக் காப்பது ஒன்றே தனது முதல் கடமை . ஆட்சி அதிகாரத்தில் இருப்பதும் இல்லாமல் போவதும் பற்றி கவலை இல்லை என்று அவர் திடமாக எடுத்த நடவடிக்கைகளை முழுமையாக நம்பிய உபி மக்கள் அவரின் பின்னே தீர்க்கமாக அணிவகுத்து விட்டார்கள். மக்களின் நம்பிக்கைக்கு வெற்றிக்கொடியாக இரண்டாவது முறையும் அவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார். முதல் முறை சட்டம் ஒழுங்கு சமூக அமைதி என்பதை கையில் எடுத்தவர். கொரோனா காலத்தில் கூட புலம்பெயர்ந்து தேசம் முழுவதிலும் பரிதவித்த தன் மாநிலம் சார்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வர எந்த பிரயத்தனமும் செய்தவர் . தன் மாநில மக்கள் பிழைப்புத் தேடி இனி எங்கும் போக விடக்கூடாது என்ற முனைப்போடு மாநிலத்தில் தேவையான தொழிற்சாலைகளை உற்பத்தி சார்ந்த வாய்ப்புகளை முன்னெடுக்க தேவையான அத்தனை உள்கட்டமைப்புகளையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்திவிட்டு முதலீட்டாளர்களை தன் மாநிலம் நோக்கி ஈர்க்கத் தொடங்கிவிட்டார்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவித்த நாடு முழுவதும் தலைவிரித்தாடிய கலவரங்களை பாஜக எதிர்ப்பு மோடி எதிர்ப்பு என்ற பெயரில் ஆளும் கட்சிகளின் முகத்தில் காறி உமிழ்வதை போல தன் சொந்த மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் அழைத்து வைத்து உங்களால் நடந்த கலவரத்தில் இவ்வளவு பொது சொத்துக்கள் சேதம். இதை சரிப்படுத்தி நஷ்ட ஈடு திரும்ப கொடுப்பது உங்களின் பொறுப்பு. தவறும் பட்சத்தில் உங்களின் சொத்துக்கள் ஜப்திக்கு வரும் என்ற ஒற்றை எச்சரிக்கையின் மூலம் உரிய இழப்பீட்டையும் வசூல் செய்தார். மீண்டும் கலவரத்தில் ஈடுபடும் தைரியம் வராமல் அனைவரையும் தட்டி வைத்தார்.
தொடர்ச்சியான கொடுங் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை சிறையில் வைத்து அரசு பணத்தில் மக்களின் வரியை விரயமாக்கி பாதுகாப்பதை விரும்பாதவர். அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்தார். ஒன்று திருந்திக் கொள்ளுங்கள். இல்லையேல் மரணித்து விடுங்கள். உங்களின் அச்சுறுத்தலால் என் மக்களும் அரசு அதிகாரமும் காவல்துறையும் எந்நேரமும் உயிர் ஆபத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. என்று ஒற்றை வாக்கியத்தில் செய் அல்லது செத்துமடி என்ற நேதாஜியின் வழி வந்தவன் நான் என்பதை தன் செயலில் நிரூபித்தவர்.
எத்தனையோ முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறீர்கள். தொடர்ச்சியாக மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தீர்கள். இரண்டாவது முறையாக முதல்வராகவும் இருக்கிறீர்கள் .ஆனால் இன்னமும் உங்களின் உடன்பிறந்த சகோதரிகள் வார சந்தைகளில் காய்கறி கடை சாலை ஓரங்களில் தேநீர் கடை மலைக்கோவில் வாசலில் சிற்றுண்டி கடை என்று அன்றாடம் காய்ச்சிகளாக பிழைப்பு நடத்துவது உங்களுக்கு வருத்தமாக இல்லையா? . அவர்களுக்கு குறைந்த பட்சம் அரசின் மூலமாக ஏதாவது நலத்திட்டம் வங்கிக் கடன் என்று ஏதாவது கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவில்லையா ? என்று கேட்டவர்களின் முன் நீங்கள் சொல்வது போல் நான் பலமுறை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் இரண்டு முறை மாநில முதல்வர் . மறுப்பதற்கு இல்லை. ஆனால் நான் இந்த பொறுப்பிற்கு வந்ததும் என் கட்சி என்னை இந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பதும் இந்த தேசத்தையும் எம் மாநில மக்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு போகவும் மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே தவிர என் குடும்பத்தையும் உறவுகளையும் வளப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. நான் இந்த பொறுப்பில் இருப்பது மாநில மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக மட்டுமே தவிர என் குடும்பத்தின் நலனுக்காக அல்ல. என்று பொங்கி வரும் கண்ணீரை அவர் கட்டுப்படுத்திக் கொண்டு பேசும் போது சன்னியாசி ஆயினும் அவர் இந்த மண்ணில் பிறந்த மகன் என்பதை உணர்ந்த ஒவ்வொருவரும் தங்களை மீறி கண்ணீர் வடித்தார்கள் என்பதே உண்மை.
கூட்டு பாலியல் பலாத்காரம் முதல் கொத்து கொலைகள் வரை பல மாநிலங்களில் தினம் தோறும் செய்தியாகும் போது கள்ள மௌனம் காக்கும் எதிர்க் கட்சிகள் அனைத்தும் உத்திரபிரதேசத்தில் ஒரு சாலை விபத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கூட அதற்கும் யோகிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா ? என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடிப் பார்த்து கூட ஏதும் கிடைக்காத பட்சத்தில் திட்டமிட்டு ஏதாவது செய்து யோகியின் அரசிற்கு களங்கம் கற்பிக்க முடியுமா அதன் மூலம் மோடிக்கு அதற்கு அடுத்து யோகி தான் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் இருக்கும் பாஜக கட்சியையும் மக்களின் எதிர்பார்ப்பையும் தகர்த்து விட முடியாதா ? என்று எத்தனையோ பிரயோசனம் செய்த போதிலும் அது அத்தனையும் தவிடு பொடியாக்கி ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார்.
ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் 200 பேரை என்கவுண்டர் செய்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு அதிகார துஷ்பிரயோகமாக தெரியவில்லையா ? என்று கேட்ட ஊடகவியலாளர்கள் பார்த்து உங்கள் வீட்டிலும் என் வீட்டிலும் கூட சகோதரிகள் பெண்கள் தாய்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பேன் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து தொந்தரவுகளிலிருந்து மாநில நிர்வாகத்தை மீட்டெடுப்பேன் என்ற வாக்குறுதியை கொடுத்து தான் நான் முதல்வரானேன். அந்த வாக்குறுதியை தான் நான் இன்றளவும் நிறைவேற்றுகிறேன். பணம் – மிரட்டல் என்ற அச்சுறுத்தலை முன்னிறுத்தி என் மாநிலத்தில் பெண்கள் – குழந்தைகளை கொடூரமாக துன்புறுத்துவது தொடங்கி அரசு அதிகாரிகளையும் காவல்துறை பணியாளர்களையும் அவர்களின் நேர்மைக்காக அச்சுறுத்துபவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு மனித உரிமை பேசும் கேட்கும் அருகதையும் இல்லை .அந்த வகையில் அவர்களுக்கு என் வழியில் நான் தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்படி கேட்டு விட்டதால் இனிமேல் மாநிலத்தில் என்கவுண்டர் நிகழ்வுகள் இருக்காது என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களுக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்தோடு இருக்கும் கடைசி ரவுடி இருக்கும் வரையில் என் மாநில ஆட்சியில் என்கவுண்டர் இருந்து கொண்டே இருக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்ஜித்த கங்கை கரையின் சிங்கம் அவர்.
சாதாரண மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மாநிலத்தில் நடக்கும் அத்துமீறலையும் அராஜகத்தையும் பல்வேறு இடங்களில் திட்டமிட்டு இந்து ஆலயங்கள் சீரழிக்கப்படுவதையும் இந்து உணர்வாளர்கள் என்ற காரணத்திற்காகவே பல திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுவதையும் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு போய் சட்டமன்றத்தில் நியாயம் கேட்டவரை பார்த்து காவி சன்னியாசி உன்னால் என்ன செய்து விட முடியும் ? உனக்கு பதில் சொல்லவா நான் பதவியில் இருக்கிறேன் ? என்று இருமாப்போடு பேசி ஒட்டுமொத்த ஆளும் கட்சியும் உதிரி கட்சிகளும் கைகொட்டி சிரித்தபோது கண்ணீர் மல்க நான் இந்து என்பது தான் உங்களுக்கு பிரச்சனையா ? எனது இந்த இந்து உணர்வும் காவி அடையாளமும் தேசிய சித்தாந்தமும் தான் உங்களுக்கு எதிரியா? அப்படி என்றால் இந்த அரசியலும் சட்டசபையும் எனக்கு வேண்டாம் . நான் அமைதியாக ஒதுங்கிப் போகிறேன். ஆனால் உங்களிடம் வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்று தயவு செய்து இந்த மாநிலத்தில் இருக்கும் மக்களை பிரித்துப் பார்க்காமல் உங்களை நம்பி வாக்களித்தவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்களை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள் என்று கண்ணீரோடு சட்டசபையில் இருந்து வெளியேறியவர். திரும்ப சபைக்கு வரவே இல்லை.
ஆனால் காலம் அவரை கைப்பிடித்து அழைத்து வந்து அதே சட்டசபையில் மாநில முதல்வராக அமர்த்தியது . எந்த மக்களுக்கு அவர் நியாயம் கேட்டாரோ ?அதே மக்களுக்கு நியாயம் வழங்கும் அதிகாரத்தை அவர் கையில் கொடுத்தது. இன்று வரை சமரசம் இல்லாமல் அந்த அதிகாரத்தை அவர் சரியாகவே பயன்படுத்தி வருகிறார். சில நேரங்களில் ஒரு மாநில முதல்வரால் இவ்வளவு பிரயத்தனம் செய்ய முடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவில் கூட திடமான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுகிறார். அவ்வகையில் அவர் ஒரு மாநில முதல்வராக முன்னோடியாக இருக்கிறார் என்பதே உண்மை.
அதன் வெளிப்பாடு தான் தொடர் குற்றங்கள் திட்டமிட்ட கொலைகள் சமூக விரோத தேச விரோத செயல்களை பிழைப்பாகக் கொண்டவர்களை எல்லாம் அவர்களை தண்டிப்பதோடு அவர்களை பாதுகாக்கும் துணையாக இருக்கும் அத்தனை பேரும் உணரும் வகையிலாக அவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தரைமட்டம் ஆகும் அவரது புல்டௌசர் நடவடிக்கை.
கொரோனா கால முடக்கம் காரணமாக நாடு அல்லலுறும் நாளில் இரவு பகல் பாராது பம்பரமாக சுழன்றவர். மரணித்த தனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட போகாமல் நான் வரவில்லை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தகவல் சொல்லி விட்டு தன் பணியைத் தொடர்ந்தார். முடை நாற்றம் வீசும் வாரணாசி வீதிகளை புதுப் பொலிவுடன் புண்ணிய ஷேத்திர அடையாளம் மீட்டெடுத்தார். அவரின் பணிகளை எதிர் கட்சிகள் தூற்றலாம். ஊடகங்கள் திரிக்கலாம். ஆனால் அதை அம் மக்களும் வாரணாசி சிவனும் அங்கீகரித்ததன் அடையாளம் தான் இன்று அவரின் ஆட்சி வழி தேசிய மாதிரியாக யோகி மாடல் என்று மக்களால் கொண்டாடப்படுகிறது.
அவர் அரச பரம்பரையில் பிறந்தவர் இல்லை . செல்வாக்கு கோடீஸ்வரர் பின்னணியோ கொண்ட குடும்பத்திலிருந்து வரவில்லை . ஒரு சாதாரண ஏழை இந்தியனின் மகனாகப் பிறந்து வறுமையின் பிடியில் வளர்ந்தவர். ஆனாலும் இளங்கலை பாடப்பிரிவில் தங்கப் பதக்கத்தோடு பட்டம் பெற்றவர் .தனது இந்து தேசிய ஆன்மீக பற்றுதல் காரணமாக சன்னியாசத்தை ஏற்றுக் கொண்டவர் . அதை மனம் மகிழ்வோடு ஆத்மார்த்தமாக இன்று வரை வாழ்ந்து காட்டுபவர். தமிழகத்தில் இருந்து போய் மடம் நிறுவிய கோரக்கர் சித்தரின் கோரக்பூர் மடாதிபதி.அவரின் அந்த சந்நியாச கோலத்திற்காக ஒரு சந்நியாசி நாடாண்டால் இப்படித்தான் இருக்கும் என்று ஏளனம் பேசி கைகொட்டி சிரித்தவர்களின் முன்னே தனது அதிரடி நடவடிக்கையின் காரணமாக மாநிலம் முழுவதையும் அமைதியையும் வளர்ச்சியையும் நிலை நிறுத்தியவர் . இன்று பிரான்ஸ் நகரம் பற்றி எரியும் போது இந்தியாவிலிருந்து யோகி என்பவரை சில தினங்களுக்கு மோடிகடனாக கொடுத்தால் நாங்கள் எங்கள் தேசத்தை மத பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டு பாதுகாத்துக் கொள்ள பேருதவியாக இருக்கும் என்று மேற்குலக நாடுகள் கேட்கும் அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் யோகி ஆதித்யநாத் என்னும் சுத்த சன்யாசி.