திரைப்படமாகும் அயோத்தி..!

0
373
திரைப்படமாகும் அயோத்தி

ஹிந்தி திரையுலகில் ராமர் பிறந்த இடமான அயோத்தி பெயரில் ‘அபராஜித அயோத்யா’ என்ற திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் நடிகை கங்கணா ராவத் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். அபராஜித அயோத்யா பற்றி கூறிய கங்கணா ‘அயோத்தியில் ராமர் பிறந்த இடமானது வரலாற்றில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளது, எண்பதுகளில் பிறந்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் எப்படி இறைபக்தியுள்ளவராக மாறினார் என்பதே படத்தின் மையக்கரு. இதனை பின்தொடர்ந்தே திரைப்படம் நகரும்’ என்றார். கங்கணா ஏற்கனவே சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் வேடத்தில் ‘மணிகர்ணிகா’ படத்தில் நடித்து புகழடைந்தார். தற்போது தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலிலதா வாழ்க்கை வரலாற்றில் நடித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here