இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதி 6 மாதங்கள் துண்டிக்கப்பட்டு இருப்பது பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான, பாஜக அரசு
உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஒன்றினை கட்ட முடிவெடுத்தது அதன் பிறகு ஆட்சிமாற்றத்தின் காரணமாக இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தற்போதைய பாஜக அரசு அதனை வெற்றிகரமாக கட்டிமுடித்து அதற்கு வாஜ்பாய் பெயரையே சூட்டி பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை மூலம் எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லலாம். இப்பாதை காரணமாக, சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும். பயண நேரம் 5 மணி நேரம் குறையும். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.