அடுத்தாண்டு முதல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிறிய அளவில் மினி ஐபிஎல் போட்டிகளை நடத்த இந்திய கட்டுப்பாட்டுவாரியம் ஆலோசித்துவருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் டி 20 போட்டிகள் 2008 ஆம் ஆண்டுமுதல் நடத்தப்படுகின்றன. இது இந்திய கிரிக்கெட் பிரியர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே போன்று சர்வதேச உள்ளூர் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்ததொடரானது கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இந்த தொடர் பெரிதாக வெற்றிபெறாத நிலையில் அதற்கு பதிலாக சிறிய அளவில் மினி ஐபிஎல் தொடரை அடுத்தாண்டு முதல் நடத்த இந்திய கட்டுப்பாட்டுவாரியம் ஆலோசனை நடத்திவருகிறது. இந்த தொடரானது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் 15- 20 நாட்கள் வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மினி ஐபிஎல் குறித்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.