நேற்று சென்னையில் புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.ஆண்டுதோறும், பொங்கல் திருநாளையொட்டி, மக்களின் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் சுற்றுலாப் பொருட்காட்சியும், அறிவுக்கு விருந்தளிக்கும் புத்தகக் காட்சியும் சென்னையில் ஒருசேர நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். புத்தகங்களே நம்மை ஒருபோதும் ஏமாற்றாத சிறந்த நண்பன். மனிதனுக்கும், இந்த உலகத்துக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்துவது புத்தகங்களே. புத்தகம் என்பது ஒரு அலங்காரப் பொருள் அல்ல. அது நம்மை நேர்மையான வழியில் வாழ்வதற்கு வழி நடத்துகின்ற தோழன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியை கண்டிருக்க முடியாது.
அதேபோல ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவர் மணற்சிற்பமும் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற அரசின் நிதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் இருந்து இந்த புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார்