முப்படைகளுக்கு தேவையான புதிய ஆயுதக் கொள்முதல் நடைமுறை கொள்கையை, மத்திய அரசு வெளியிட்டது. அதில்.,
ஆயுத கொள்முதலில் உள்ள பல்வேறு சிக்கல்களை நீக்கும் வகையில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்பில் உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் வகையிலும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். டி.ஆர்.டி.ஓ மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் கொண்டுவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
அவசரகாலங்களில் தங்கள் பட்ஜெட்டில் இருந்து உடனடியாக வாங்குவதற்கு, முப்படைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் உற்பத்தியில் முதலீடுகள் அனுமதிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவும், ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்கவும் வலுவாகி செய்யப்பட்டுள்ளது.