விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதால் உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர், இதனை தொடர்ந்து பக்ரைன் நாட்டின் ஜீப்பர் நகரிலுள்ள கடை ஒன்றில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த கடைக்குச் சென்ற இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்ட பெண் ஒருவர், இது முஸ்லிம் நாடு என கடைக்காரரை அதட்டி சொல்லியபடியே விநாயகர் சிலைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு உடைத்து நொறுக்கியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக, அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவத்திற்கு திரைப்பட இயக்குனர் திரு.மோகன் மக்களுக்குள் பிளவு உண்டு பண்ணவே இதெல்லாம் பண்றாங்க போல.. என கருத்து தெரிவித்துள்ளார்
தமிழர்கள் அதிகம் வணங்கும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ் மண்ணிலேயே தடை விதித்தது, விநாயகர் சதுர்த்தி விழா நடந்தால் மத கலவரம் வெடிக்கும் என தி.கவினர் பேசுவது, விநாயகர் சிலையை உடைப்பது, அதற்கு நாம் சகோதரர்களாக நினைக்கும் அடிப்படைவாத இஸ்லாமியர்கள் ஆதரவு தருவது என தொடர்ந்து அரங்கேறிவரும் ஹிந்து விரோத செயல்பாடுகளால் ஹிந்த்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதெல்லாம் நல்லதா.. மக்களுக்குள் பிளவு உண்டு பண்ணவே இதெல்லாம் பண்றாங்க போல.. அமைதி மார்க்கத்தில் இப்படியும் சில பதர்கள்.. https://t.co/i6BXghtKia
— Mohan G Kshatriyan (@mohandreamer) August 16, 2020