பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மிலிந்த் சோமன் நமது இந்திய எல்லை பகுதியில் புகுந்து கொண்டு சீனர்கள், அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சீனர்களின் தயாரிப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று அண்மையில் இந்திய மக்களிடம் கேட்டு கொண்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை அதே நேரத்தில் ‘இது 1962 அல்ல’ என்பதை சீனா மறந்து விட கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தியாவின் உரிமைகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க முடியாது. எங்கள் பகுதிக்குள் சாலைகள் அமைப்பதற்கு சீனர்களிடம் ஏன்? நாங்கள் அனுமதி பெற வேண்டும் என்று அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பிரச்சனையைத் தூண்டும் வகையில். ட்ரோன்கள் மற்றும் பிற வழிகள் மூலமாக ஆயுதங்களை இந்தியாவிற்குள் அனுப்பும் செயலை இத்தொடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
32 முறை பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறியுள்ளது, 200 க்கும் மேற்பட்ட ஆயுதங்களை பஞ்சாப் காவல்துறை கைபற்றியுள்ளது. அதற்குரிய விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டி இருக்கும் என்று முதல்வர் அந்நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.