சீன நாட்டில் பிறந்த கொரோனா இன்று, உலகம் முழுவதும் பரவி தனது, நச்சு வாயால் 5,000 ஆயிரத்திற்கும், மேற்பட்ட மக்களின் உயிர்களை விழுங்கியுள்ளது. இன்று உலகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட, மக்கள் இத்தொற்று நோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும், தங்கள் நாட்டு மக்களுக்கு பல்வேறு, ஆலோசனைகள் மற்றும், இந்நோய் தொற்றில் இருந்து, எப்படி தற்காத்து கொள்வது என்கின்ற வழிமுறைகளையும் கூறி வருகின்றது. சீனா, ஈரான், இத்தாலி, கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆகும். இத்தாலியில் கொரோனா தொற்றிற்கு 27,980 பேருக்கு தீவிர, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அந்நாட்டில் 2,503 பேர் தங்கள், இன்னுயிரை இழந்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இத்தாலி அரசு, பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வேண்டாம், என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் போப் அரசாங்க, அறிவுரைகளையும் மீறி ரோமில், உள்ள இரண்டு தேவாலயங்களுக்கு நடந்து சென்று, கொரோன வைரஸ் முடிவுக்கு, பிரார்த்தனை செய்ததுடன். அவர் ஊடகங்களையும் சந்தித்துள்ளார்.
கடந்த மாதம் முதல் போப் சளி, தொல்லையால் கடுமையாக அவதிப்படுவதாக, ஊடகங்கள் கூறிவரும் நிலையில். போப் தேவாலயம் சென்றிருப்பதற்கு, இத்தாலி மக்கள் தங்களின், கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். போப் தொடர்பாக அண்மை காலங்களில் பல்வேறு காணொலிகள் ஊடகங்களில் உலாவி வருகிறது.
கிறிஸ்துவ மிஷனரிகள் கொரோனாவையே மதமாற்றம் செய்வார்கள் நெட்டிசன்கள்-கலாய்!
கொரோனாவை கண்டு மக்கள் வீட்டில் முடங்கியிருக்க, பாதிக்கப்பட்டவர்களை பாதிரியாளர்கள் நேரில் சென்று சந்தியுங்கள் என்று கூறிய போப்- அதிர்ச்சியில் பாதிரியாளர்கள் !