பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்திய நட்சத்திர வீரர்களில் ஒருவர். இவரின் ஆக்ரோசமான பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ் மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறவர்.
இவர் இஸ்லாமியராக இருந்தாலும் தம் விருப்படி வாழ வேண்டும் என்கிற சுதந்திர எண்ணம் கொண்டவர். அவ்வப்பொழுது இவரின் கருத்திற்கு அச்சமூகத்தை சார்ந்த அடிப்படைவாதிகளின் கடும் விமர்சனத்திற்கும்,அச்சுறுத்தலுக்கும், உள்ளாவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனாலும் அவர் எதற்கும் கவலைப்படாமல் தம் விருப்பபடி இருப்பதையே அவர் விரும்புகிறார்.
இந்நிலையில் ஷமியின் அன்பு மகள் ஹிந்து மதத்தின் கடவுள் திருவுருவத்தின் முன் சேலையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு என் செல்ல மகளே உன்னை இறைவன் ஆசிர்வதிக்கட்டும், உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதனை அடுத்து வழக்கம் போல் மோப்பம் பிடித்த அடிப்படை பயங்கரவாதிகள் உன் குடும்பம் நரகத்திற்கு செல்லும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயல்படும் உன்னை அல்லா மன்னிக்கமாட்டான். என கடுமையான விமர்சனத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழிவு செய்து வருவது,அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களால் அதிகம் நேசிக்கும் தலைவர்களில் அப்துல் கலாமும் ஒருவர் அவர் அனைத்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். இருந்தபோதிலும் அவரும் அடிப்படைவாதிகளின் கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளானவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் போலி மதச்சார்பின்மை பேசும் தலைவர்கள் ஷமி போன்ற ஒரு இஸ்லாமியர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது கோமா நிலைக்கு போய் விடுவது வழக்கமான ஒன்று. இதுபோன்ற காட்டிமிராண்டி தனத்தால் இந்தியாவின் மதச்சார்பின்மை கேள்விகுறியாகி உள்ளது என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.