இந்தியாவில் இரண்டு கோடி பங்களாதேஷியர்கள் சட்டவிரோதமாக உள்ளனர்- மத்திய அமைச்சர் கிரேன் ரிஜிஜு

இந்தியாவில் இரண்டு கோடி பங்களாதேஷியர்கள் சட்டவிரோதமாக உள்ளனர்- மத்திய அமைச்சர் கிரேன் ரிஜிஜு

Share it if you like it

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான பிரச்சாரம் செய்து நாடு, முழுவதும் வன்முறை ஏற்பட காரணமாக இருந்ததாக மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதில் பல அப்பாவி மக்களின் உயிருக்கும்,

உடைமைக்கும், பலத்த தேசம் ஏற்பட்டன. எந்த ஒரு இந்திய குடிமகனும் இச்சட்டத்தால் துளியும், பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் மறைத்ததே வன்முறை ஏற்பட காரணம் என்று அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

இளைஞர்கள், விளையாட்டு மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் கிரேன் ரிஜிஜு சமீபத்தில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 20 மில்லியன் சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள்  தங்கியுள்ளனர். சரியான ஆவணங்கள், இல்லாமல் இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்துள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன. மேலும் இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர், என்று ரிஜிஜு அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.

சட்டத்திற்கு புறம்பாக பதுங்கி வாழும் இரண்டு கோடி பங்களாதேஷியர்களை உடனே நாடு கடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it