பாகிஸ்தானின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்திய குடியுரிமைபெறவுள்ளார். பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த திவ்யாரம் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குடியுரிமை திருத்த மசோதாவினால் இந்திய குடியுரிமை பெறவுள்ளார்.
பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தானின் பிரதமராக இருந்தபோது திவ்யாரம் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தார். ஹிந்து ஒருவர் அரசியலில் முன்னேறுவதை பொறுக்காத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் இவரையும் இவரின் குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியுள்ளனர். திவ்யாரம் உயிருக்கு பயந்து பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் திவ்யாரம் இந்திய குடியுரிமைபெறவுள்ளார். இது குறித்து கூறிய திவ்யாரம் “குடியுரிமை பெற்றால், தனது குடும்பத்திற்கு குடும்ப அட்டையும் அரசால் அளிக்ககூடிய சலுகைகளும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் கிடைக்கும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார். பாகிஸ்தானில் சிறுபான்மை இனத்தை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் பாதுகாப்பில்லை. ஆனால் இந்தியாவிலோ சிறுபான்மையின மக்கள் குடியரசுத்தலைவராகவும், பிரதமராகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.