“இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவே விரும்புகிறோம்” – K.T. ராகவன்

“இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவே விரும்புகிறோம்” – K.T. ராகவன்

Share it if you like it

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குடியுரிமை திருத்த மசோதாவில் ஏன் இலங்கை தமிழர்களை சேர்க்கவில்லை? என்ற கேள்விக்கு பா.ஜ.க மாநில செயலாளர் கே.டி. ராகவன் அவர்கள் அளித்த பதிலானது;

தமிழத்தில் தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளானது தாங்கள் தான் இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்பதாக கூறிவருகின்றன. ஆனால் அவர்கள் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். கிட்டதட்ட ஒருலட்சம் இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லவே விரும்புகின்றனர். மேலும் அவர்களின் வீடு, நிலம் கோவில்கள் சிங்களர்களாலும் இலங்கை இராணுவத்தாலும் ஆக்கிரமிப்பு செய்பட்டுள்ளன.கோவில்கள் பௌத்த விகாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றை மீட்டு அவர்களிடத்தில் திருப்பி அளிக்கவேண்டும். அதற்கான பணியில் தான் இந்திய அரசானது தற்போது ஈடுபட்டுவருகின்றது.  

இந்திய அரசானது இலங்கை தமிழர்களை அவர்களின் சொந்த நாட்டிலேயே குடியமர்த்தவே நினைக்கிறது. அதனால் தான் இலங்கை தமிழர்களை பற்றி மசோதாவில் இடம்பெறவில்லை. இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசானது இதுவரை 50,000 வீடுகளை கட்டிகொடுத்துள்ளது. ஆனால் தி.மு.கவோ விடுதலை சிறுத்தைகள் கட்சியோ இலங்கை தமிழர் நலனில் சிறிதும் அக்கறையின்றி வெற்றுக்கூச்சலிடுகின்றன. இலங்கை தமிழர்களை அவர்களின் சொந்த நாட்டில் கண்ணியத்துடன் வாழவைக்கவே இந்திய அரசானது விரும்புகிறது. இந்த விவகாரத்தில் அனைவரும் இலங்கை தமிழகர்களுடன் இருக்கவேண்டும் என்றார்.


Share it if you like it