இரண்டாம்கட்ட தேர்தல் துவக்கம்

இரண்டாம்கட்ட தேர்தல் துவக்கம்

Share it if you like it

தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததுஅதனை தொடர்ந்து 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடைபெற்று 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மீதமுள்ள 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it