இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து  சலுகை  இந்துக்களுக்கு  மட்டும் வெறும் கை!

இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து சலுகை இந்துக்களுக்கு மட்டும் வெறும் கை!

Share it if you like it

இஸ்லாமியர் நலன் கருதி இன்று சட்டசபையில்  110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல சலுக்கைகளை அறிவித்துள்ளார். ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்களின் புனித தலங்கள்  சீர்கெட்டும் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாமல் எவ்வளவோ ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளது. அதற்கு அரசு என்ன சலுகைகள் தொடர்ந்து  வழங்கி வருகிறது என்பது  அனைவரின் கேள்வியாக உள்ளது.

நாத்திர்களின் கூடாரமாக திகழும் இந்து அறநிலையத்துறை தொடர்ந்து ஆலயங்களின் சொத்துக்களையும், அதில் இருந்து வரும் வருவாயையும், தங்கள் சுயநலத்திற்காக கைப்பற்றிக்கொள்வதை அன்றாடம் நாம்  செய்தித்தாள்களில்  காணமுடிகிறது அந்த கொடுமைக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?.

அதுமட்டுமில்லாமல் ஆபரணங்கள், விலை மதிக்க முடியாத சிலைகள் முதற்கொண்டு அந்நிய நாட்டில் இருந்து மீட்டு வரும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளன.  அதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஆலய வருவாயை ஆலயத்திற்கும் இந்துக்களின் நலன் சார்ந்தே செலவிட வேண்டும் அதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

ஆலய சொத்துக்களில் இருந்து வருகிற வருவாயில் சலுகைகள் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு வழங்குவது என்ன நியாம்? அவர்களின் மசூதிகளில் இருந்தோ, தர்காவில் இருந்தோ என்ன வருவாய் அரசுக்கு கிடைக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it