ஈரான்-அமெரிக்கா டிஷ்யூம் டிஷ்யூம்!

ஈரான்-அமெரிக்கா டிஷ்யூம் டிஷ்யூம்!

Share it if you like it

ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளம் மீது மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட டுவிட் பதிவில், “ 2 அமெரிக்க தளங்கள் மீது ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடப்பதால் நாளை அறிக்கை வெளியிடுகிறேன். மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஆல் இஸ் வெல்” என்று பதிவிட்டுள்ளார்.


Share it if you like it