ஊரடங்கால் உணவின்றி தவித்த மலைவாழ் மக்களை தேடி சென்று உணவு பொருட்களை வழங்கிய பிஎம்எஸ் !

ஊரடங்கால் உணவின்றி தவித்த மலைவாழ் மக்களை தேடி சென்று உணவு பொருட்களை வழங்கிய பிஎம்எஸ் !

Share it if you like it

  • தேனிமாவட்டத்தின் கடைகோடி கிராமம் பளியன்குடி. இது தமிழக – கேரளா மாநில எல்லையிலான – கண்ணகி கோவிலின் அடிவாரத்தில் உள்ளது. அங்கு சுமார் 70 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
  • அவர்கள் அனைவரும் பளியர்கள் எனப்படும் மலைவாழ் மக்கள் (ST ) மட்டுமே. இவர்களின் வாழ்வாதரம் முழுதும் வனம் மற்றும் காடுகளின் விளையும் மர தாவரங்களும், ஆடு, மாடு மேய்த்தலும், கூலி வேலைக்கு செல்வதன் மூலம் பொருளீட்டல் மட்டுமே.
  • கொரோனா தொற்றுநோய் விளைவாக ஏற்பட்ட சூழல் இவர்களை வீட்டுக்குள் முடக்கி போட்டுவிட்டது. இதனால் அன்றாட வாழ்வாதரத்திற்கு இவர்கள் படும் துயரத்தை நீக்குவதற்கு, தேனி ம்,மாவட்டத்தின் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மூலமாக. இனி வரும் 10 நாட்களுக்கு ஒரு குடும்பம் வாழ அடிப்படை தேவையான அரிசி, பலசரக்கு பொருட்கள், சத்துணவுக்கு தேவையான பயறு வகைகள், சுத்தம் – சுகாதரம் பேண குளியல் சோப் , Washing சோப், Sabina Powder – என்று 25 பொருட்கள் அடங்கிய பை ( Kit ) ஒன்று (சுமார் மதிப்பு 1000 Rs ) தயார் செய்து மொத்தம் உள்ள 70 குடும்பத்திற்கு 70 பைகளும் தயார் செய்து அதை செவ்வன Pack செய்து பளியன் குடிக்கு சென்று பாரதிய மஸ்தூர் சங்க [BMS] அமைப்பினர் நேரடியாக அவர்கள் வீட்டுக்கே சென்று தந்து விட்டு வருகின்றனர்.
    இந்த நிகழ்வில் வன துறை அதிகாரிகள் ( Forest Department officers ) கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு அழைத்தது மட்டுமல்லாமல் பாரதிய மஸ்தூர் சங்க [BMS] அமைப்பினரை பாராட்டி சென்றனர்.

Share it if you like it