ஐயுசி கட்டணத்தை அடுத்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐயுசி கட்டணம் என்பது நாம் ஒரு நிறுவனத்தின் சேவையில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கும்போது, அழைக்கும் நிறுவனமானது அழைப்பு விடுத்த நிறுவனத்திற்கு சேவை கட்டணம் அளிக்கவேண்டும் இது நிமிடத்திற்கு 6 பைசா என்ற மதிப்பில் அனைத்து நிறுவனங்களும் வசூலித்துவருகின்றன. ‘இதனால் தாங்கள்தான் அதிகத்தொகையை மற்ற நிறுவங்களுக்கு அளித்து வருகிறோம்’, எனவே இந்த கட்டணத்தை நீக்கவேண்டும் என ஜியோ நீண்ட நாட்களாக டிராயிடம் முறையிட்டுவருகின்றது. இதனை ஏற்று டிராய் முதலில் ஜனவரி 1, 2020 அன்று முதல் ஐயுசி கட்டணம் நீக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் கட்டணநீக்கத்தால் தொலைத்தொடர்புத்துறையில் சமநிலையற்ற சூழல் உண்டாகும் என்ற ஜியோவை தவிர மற்ற நிறுவங்களின் வலியுறுத்தியதால், ஐயுசி கட்டணத்தை நீடித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையானது ஜியோவின் வருகைக்கு பின்னர் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ரிலையன்ஸ், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையைவிட்டே வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.