ஒபாமாவை தொடர்ந்து ராகுலை விமர்சித்த கூட்டணி கட்சி தலைவர் சரத்பவார்..!

ஒபாமாவை தொடர்ந்து ராகுலை விமர்சித்த கூட்டணி கட்சி தலைவர் சரத்பவார்..!

Share it if you like it

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது அனுபவத்தை தொகுத்து புத்தகம் ஒன்றை அண்மையில் (“A Promised Land” ) வெளியிட்டு இருந்தார்..  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி குறித்து பராக் ஒபாமா எழுதியுள்ள புத்தகத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் தலையங்கத்தில் வெளியிட்டு இருந்தது.. தெரிவித்துள்ளது…

  • ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர்
  • ஆசிரியரிடம் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போலவே ஒரு விஷயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராக ராகுல் காந்தி திகழ்கிறார்.
  • ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வமில்லை’  என்று கருத்து தெரிவித்து இருந்தார்..

தற்பொழுது  மஹாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி  நடத்தி வருகிறது.. முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே உள்ளார். இந்நிலையில், அந்த மாநிலத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் பேட்டி அளிக்கும் பொழுது ராகுல் காந்தி குறித்து இவ்வாறு கூறியுள்ளார்..

நாட்டை வழிநடத்தும் தலைவராக மாறுவதில், ராகுலுக்கு பக்குவம் போதவில்லை என நினைக்கிறேன் என்று தெரிவித்து இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it