‘ஒளி விளக்கு’  வழிக்காட்டும் உனக்கு!

‘ஒளி விளக்கு’ வழிக்காட்டும் உனக்கு!

Share it if you like it

அகல் விளக்கு தத்துவம் தெரியுமா? ஒரே தீபத்தில் ஒன்பது ராசிகள்!

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலக்ஷ்மி குடியிருப்பாள். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = சூரியன்

2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

3.) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

8). வெளிச்சம் பரவுகிறது – இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.


Share it if you like it