அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் தேவையில்லை.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத். மற்றும் 24 மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து அண்மையில் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு குலாம் நபி ஆசாத் பேட்டியளிக்கும் பொழுது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
எனது கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் தேவையில்லை. காங்கிரஸை சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் மாற்றுவதே எனது ஒரே நோக்கம்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளில் உண்மையான அக்கறை உள்ளவர்கள், காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை வரவேற்பார்கள். காங்கிரஸ் கட்சியை வலுவானதகாவும், செயல்திறனுடையதாகவும், மாற்றவே காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன்.
காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி, அதன் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நிர்ணயித்தால் என்ன பிரச்சனை. அகில இந்திய தலைவர், மாவட்ட தலைவர்கள், மண்டல தலைவர்களை, முறையாக தேர்தல் நடத்தி கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.