பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மூ-காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் 18 September-2016-ஆம் ஆண்டு திடீர் தாக்குதல் நிகழ்த்தினர். அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் செப்டம்பர் 28 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 29-ஆம் தேதி அதிகாலை வரை பயங்கரவாத குழுக்களின் மீது அதிரடி தாக்குதல் நிகழ்த்தினர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் துணிச்சல் மிக்க நமது ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி பயங்கரவாத தளங்களை அழித்தனர். இன்று வரை எந்த ஒரு இந்தியனாலும் இந்த சம்பவத்தை மறக்க முடியாத நிகழ்வு என்பது நிதர்சனம்.. ஆனால் சிலர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததற்கான ஆதாரங்களை கேட்டனர்.. இன்று பாரதப் பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து பேசிய பொழுது. இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.