காசி, மதுரா விவகாரத்தை  கையில் எடுத்த விகடன் – பொய் செய்தி பரப்பி சர்ச்சை…

காசி, மதுரா விவகாரத்தை கையில் எடுத்த விகடன் – பொய் செய்தி பரப்பி சர்ச்சை…

Share it if you like it

அயோத்தியை போல காசி, மதுராவில் கோவிலாக இருந்து சுல்தான் மற்றும் முகலாயர் ஆட்சிக்காலங்களில் இடித்து மசூதிகளாக மாற்றப்பட்ட இடங்களை இஸ்லாமியர்கள் விட்டுத்தர வேண்டும் என அகில பாரத அஹாடா பரிஷத் (அகில இந்திய சாதுக்கள் சபை) தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
blankஇது குறித்து விகடன் யூட்யூப் சேனலில் வெளியாகும் ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ” என்ற நிகழியில் பேசிய சிபி, சரண் என்ற இரண்டுபேர் ஏதோ காசி, மதுரா நகரங்களை விட்டு இஸ்லாமியர்கள் மொத்தமாக வெளியேற சொன்னது போன்றும், அங்குள்ள எல்லா மசூதிகளையும் அவர்கள் உரிமைகோரியது போன்றும் தகவலை தவறாக திரித்து கூறி, மக்கள் மத்தியில் ஒரு மத பிளவை ஏற்படுத்தும் விதமாக பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நியூஸ் 18, புதிய தலைமுறை போன்ற ஊடகங்களில் இடதுசாரி சிந்தனையாளர்கள் புகுந்து மறைமுகமாக ஹிந்துவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இப்பொழுது அந்த வரிசையில் விகடனும் இணைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.


Share it if you like it