தமிழகத்தில் தற்பொழுது விவாத பொருளாக மாறியுள்ளது நீட் தேர்வு. திரை பிரபலங்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், நீட் தேர்வு குறித்து தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கார்த்தி சிதம்பரம். நீட் தேர்வுக்கு தனது முழு ஆதரவு என்று அண்மையில் அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதே சமயத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் நீட் தேர்விற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்தால் காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சி எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் இந்த கருத்தையும் திமுகவினரிடம் விவாதத்திக்கலாமே. pic.twitter.com/ZZ25iDI9S5
— SIVA PRABAKAR (@siva_5353) September 13, 2020
#நீட் தேர்வால் மீண்டும் ஒருஉயிர் பலியாகியுள்ளது.
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் தற்கொலை மிகுந்தவேதனை அளிக்கிறது.
நீட் தீர்வை தடை செயவதன் மூலமே இந்த வேதனைக்கு முடிவுகட்டமுடியும்.
ஒரு குறிப்பிட்ட கல்வியோ,மதிப்பெண்களோ வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. நம்பிக்கையோடிருங்கள் கண்மணிகளே.#BanNEET— Jothimani (@jothims) September 12, 2020