காற்று மாசு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

காற்று மாசு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

Share it if you like it

தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்றுமாசு குறித்து இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து விவாதம் மேற்கொள்ள பூச்சியநேரத்தை ஒதுக்க எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் வருடாவருடம் தலைநகர் டெல்லியின் காற்றின்தரம் குறைந்து, மாசு அதிகரித்தபடியே உள்ளது. காற்று மாசுமிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. காற்றின் தரக்குறியீட்டு எண் 0-50 வரை இருந்தால் நல்லநிலையாகும். ஆனால் டெல்லியின் காற்றின் தரம் 201-300 வரை உள்ளது. இது மோசமான நிலை என தேசிய மாசுபாட்டுவாரியம் தெரிவித்துள்ளது.


Share it if you like it