பிரிவினைவாத ஊடகங்கள் தொடர்ந்து இந்திய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செயல்ப்பட்டு வருகின்றன. இதனை முறியடிக்கும் நோக்கில் வரும் 29ம் தேதி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் மக்கள் கலந்துகொள்ளும் பேரணியில் இச்சட்டத்தால் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்பதை உணர்த்தும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் அதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதை எடுத்துரைப்போம் திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ”தேச பணியில் 1000 பேர்” என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். மேலும் மோடி, அமித்ஷா சிறப்பான முறையில் இத்திட்டத்தை நிறைவேற்றியதற்கு தங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி பேரணி!
Share it if you like it
Share it if you like it