கேரளாவின் முக்கிய கத்தோலிக்க மதபோதகர் சேவியர் கான் வட்டாயில் அண்மையில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார்.
”தீவிரவாத கிளைகள் தங்கள் செல்வாக்கை அனைத்து அடுக்குகளிலும் விரிவுபடுத்தியுள்ளதால் கேரளாவின் நிலைமை வெகுவாக மாறியுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசுபவர்களுக்கு கேரளாவில் ‘சங்க பரிவார்’ என்று முத்திரை குத்தப்படுகிறது.
“கேரளாவில் முஸ்லிம்கள் மேலும் குடியேறினால், அது ஜனநாயக சமநிலையை அழித்து, கிறிஸ்தவர்களின் இனப்படுகொலைகளுக்கு வழி வகுக்கும்”. மனித விரோத சக்திகள் கேரளாவில் அதிகரித்து வருகின்றன.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் ஜிஹாதிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்துவ மதத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பல வகுப்புவாத இயக்கங்கள் கேரள மாநிலத்தில் உள்ளது என்று மதபோதகர் தெரிவித்து இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் முஸ்லிம் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை இனப் படுகொலை செய்வதாக கத்தோலிக்க பாதிரியார் கூறுகிறார் https://t.co/gRQMwZDtQE
— E Chidambaram. (@JaiRam92739628) September 9, 2020