கொரோனா பாதித்த காவலர்களை வைத்து விசாரிக்கப்படும் அர்னாப் காங்., கூட்டணி அரசு- அட்டூழியம்!

கொரோனா பாதித்த காவலர்களை வைத்து விசாரிக்கப்படும் அர்னாப் காங்., கூட்டணி அரசு- அட்டூழியம்!

Share it if you like it

அண்மையில் இரண்டு ஹிந்து துறவிகளை  மத வெறி பிடித்த கும்பல் ஒன்று மிக கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் ரத்த கண்ணீர் வடிக்கும் வகையில் இருந்தது. வழக்கம் போல் ஊடகம், அரசியல்வாதிகள், பத்திரிகைகள், நீண்ட மெளனம் காத்தது.

உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட அர்னாப் கோஸ்வாமி தனது டி.வி விவாதத்தில் இக்கொடுமைக்கு எதிராக கொதித்தெழுந்தது மட்டுமில்லாமல் சில கேள்விகளை எழுப்பினார்.

  • இத்தாலி ரோம் நகரிலிருந்து வந்த அன்டோனியா மைனோ (சோனியா காந்தி) கிறிஸ்துவர் கொல்லப்பட்டு இருந்தால் இதுபோல அமைதியாக இருந்திருப்பாரா?
  • இந்து துறவிகளின் கொடூரமான கொலையை மூடி மறைக்க நினைக்கும் ஊடகங்களே நீங்கள் வெட்கப்பட்ட வேண்டும் என்று அர்னாப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
நாடு முழுவதும் அன்று வைரலான புகைப்படம்.

இதற்காக அவர் இன்று வரை கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்.

காங்கிரஸ் மாநில அரசுகள் அவர் மீது நாடு முழுவதும் 150 க்கும் மேலான பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது. 12 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை என்ற பெயரில் காங்கிரஸ் கூட்டணி அரசு கடும் நெருக்கடிகளை அவருக்கு கொடுத்து வருகிறது.

சாதுவின் உடல்கள்

கொரோனா தொற்று பாதித்த போலீஸ் அதிகாரி ஒருவர் அர்னாப்பிடம் விசாரணை மேற்கொண்டு இருப்பது நாடு முழுவதும் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாக அர்னாப் வழக்கறிஞர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it