கொரோனா வைரஸ் தாக்குதளிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள  பிரதமர் மோடியின்  விழிப்புணர்வு உரை – பின்பற்றுவது  இந்திய குடிமகனின் கடமை !

கொரோனா வைரஸ் தாக்குதளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பிரதமர் மோடியின் விழிப்புணர்வு உரை – பின்பற்றுவது இந்திய குடிமகனின் கடமை !

Share it if you like it

சற்று முன் தன் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொரோனா வைரஸை குறித்து உரையாற்றினார் அவற்றை பற்றி இங்கு காண்போம்:-

  • உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
    இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும்
  • உலகப்போர்களை விட கொடியது கொரோனா வைரஸ். நம்மில் சிலர் இது சிறு பிரச்சனை என எண்ணியுள்ளனர். ஆனால் இது வரை இதற்கு மருந்து தயாரிக்கப்படவில்லை.கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. உலகப் போரின் போது கூட நாடுகள் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை
  • திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. ஒவ்வொரு இந்தியனும் கொரோனா வைரஸ் குறித்த சரியான தகவல்களை பெறுவது அவசியம். கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்து வருகிறது.
  • 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் இந்த சமயத்தில் ஒரு சங்கல்பம் எடுத்து கொள்வோம். நாம் ஆரோக்கியமாக இருப்போம், மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க வைப்போம்.
  • அடுத்த சில நாட்கள் வரை அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வீட்டிலியே இருப்போம். குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும் சில தினங்களுக்கு வீட்டில் இருந்து வெளிவர வேண்டாம்.
  • மார்ச் 22 அன்று யாரும் வெளியே வராதீர்கள். மார்ச் 22ம் தேதி மக்களுக்காக ஊரடங்கு நடைமுறையை பின்பற்றவேண்டும்; காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வர வேண்டாம். மார்ச் 22ம் தேதி மக்கள் ஊரடங்கு நிகழ்வில் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனாவை எதிர்கொள்ள சமூக ஒன்று கூடலை தவிர்ப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். 130 கோடி பேரும் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னெடுக்க வர வேண்டும். கொரோனவை பற்றி மக்களின் கவலை அதிகரிப்பது இயல்புதான். கொரோனா பரவும் முறையை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
  • இந்த அசாதாரான சூழலில் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் ஊதியம் ரத்து போன்ற நடவடிககைகளில் ஈடுபட வேண்டாம்.
    இது மக்களுக்கு மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு.
  • கொரோனவால் ஏழைகளுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது. மனிதாபமானத்துடன் உணர்வுபூர்வமாகவும் தனியார் நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டும்
    கடினமான சூழ்நிலையிலும் இந்திய குடிமக்கள் உறுதியோடு இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமாக தேவைப்படுகிறது
  • கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்கள், மற்றும் அத்தியாவசிய சேவை செய்பவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு அவரவர் இல்லத்தின் வாயிலில் நின்று கை தட்டி, அல்லது ஒலி எழுப்பியோ நன்றி செலுத்துவோம். நமக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும், யாரும் பீதி அடைய வேண்டாம்.
  • கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்த கொடிய நோய் பரவுவதற்கான சங்கிலியை நாம் உடைக்க வேண்டும். இது காரணமாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார சோதனை ஆய்வாளர்கள் போன்ற முன்னணி போராளிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
  • கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு உண்மையான இந்தியரைப் போல ஒன்றுபட்டு ஒற்றுமையாக நிற்போம். கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.
    இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி அந்த உரையில் கூறியுள்ளார்.
  • நாட்டு மக்களின் நலன் கருதி பிரதமர் மோடி கூறியதை பின்பற்றுவது அனைத்து இந்திய குடிமக்களின் கடமையாகும்.

Share it if you like it