Share it if you like it
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது. இன்று 12 பைசாக்கள் சரிந்து 71.15 ரூபாய் என வர்த்தகமாகி வருகின்றது. ஆனால் இந்திய பங்குச்சந்தையானது தொடர் உச்சத்திலேயே உள்ளது. கடந்த ஒருவாரமாக பங்குகள் ஏற்றத்திலேயே உள்ளன. இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தையானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் 115 புள்ளிகள் அதிகரித்து 41,674 புள்ளிகளிலும் நிஃப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 12,226 புள்ளிகளிலும் வணிகமானது. யெஸ் வங்கி, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் மற்றும் மகிந்திரா நிறுவங்களின் பங்குகள் 6 விழுக்காடு முன்னேற்றம் கண்டன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேறியது. இது சந்தையில் எதிரொலித்தது.
Share it if you like it