நாகை மாவட்டத்தை சேர்ந்த 85 வயதான அந்தோணியம்மாள் என்ற மூதாட்டி கணவரை இழந்து பெட்ரா பிள்ளைகளையும் இழந்து தனிமையில் வாழ்ந்து வந்ததால் வறுமையின் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள சர்ச்சுக்கு நிதி வழங்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ம் தேதி அந்தோணியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய அந்த பகுதியில் உள்ள கிருஸ்தவ கல்லறை தோட்டத்துக்கு உடலை எடுத்துவந்தனர் அப்போது கல்லறை தோட்டத்தை நிர்வகித்துவரும் அந்த பகுதியை சேர்ந்த சர்ச்சின் தூண்டுதலின் பேரில் அப்பகுதி அடிப்படைவாத கிருஸ்தவர்கள் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யவிடாமல் கல்லறை தோட்டத்துக்கு பூட்டு போட்டனர்.
இவ்விஷயத்தை பற்றி செய்தி வெளியிட்ட பிரபல பத்திரிகைகள் கல்லறை தோட்டத்தை நிர்வகித்தவரும் சர்ச் நிர்வாகத்தை பற்றியோ, அல்லது கல்லறை தோட்டத்திற்கு பூட்டுப்போட்ட அடிப்படைவாத கிருஸ்த்தவர்களை பற்றியோ குறிப்பிடாமல் ”எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்” என பொத்தாம் பொதுவாக தலைப்பிட்டிருந்தது இப்பொழுது பெரிதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.